அவ்வை தமிழ்ச் சங்கம் - எட்டாம் நிகழ்ச்சி பற்றிய சுருக்கம். / Short info on the Avvai Tamil sangam Eigth Program. ( 05-10-2008)
சிறுவர்களின் பட்டிமன்றமும், பனையன் சண்முகம் அவர்களின் பலகுரல் நிகழ்ச்சியும்.
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அக்டோபர் 5 ம் தேதி அன்று திரிலோக்புரி, புது டெல்லியில், சிறுவர்கள் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் கணீர் குரலில் தமிழ் தாய் வாழ்த்து ஒலித்தபின், " குழந்தைகள் ஒழுக்கத்தை கற்பது பள்ளியிலா? வீட்டிலா? " என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், 5 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வீரமணி நடுவராக இருந்தார். சிறுவர், சிறுமியர்களின் வாதத் திறமை கண்டு வந்திருந்த அனைவரும் வியந்தனர். சிறுவன் வீரமணியின் கணீர் குரல் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்களில் பலர் 5-ம் வகுப்பு படிப்பவர்கள் என்பது குறிப்படத்தக்கது.
"பனையன் சண்முகம் " அவர்களின் "பலகுரல்" மிமிக்ரி நிகழ்ச்சி கூடியிருந்த மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரை அவர் தன் குரல் திறைமையால் வெளிப்படுத்தினார்.
சங்கத் தலைவர் திரு.சங்கரன் சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
Go to the other programs by clicking the link below
| Date | Location | Description | To See photos |
| 23-26/1/2010 | Noida | Awareness Program on organ donation & Dances of India Festival | Click here |
| 27/7/2009 | M.Vihar Ph III | KodaiVizha-2009 | Click here |
| 24-26/1/2009 | Noida | Tamilnadu Cultural Festival | Click here |